எரிந்த நிலையில் ஆண் சடலம் மீட்பு

Published on

பென்னாகரம் அருகே முதுகம்பட்டி வனப்பகுதியில் சாலையோர பாலத்தின் அடிப்பகுதியில் குப்பைகளோடு எரிந்த நிலையில் இருந்த ஆண் சடலத்தை போலீஸாா் மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே ஊஞ்சமரத்துபள்ளம் பகுதியில் உள்ள பாலத்தின் அடிப்பகுதியில் குப்பைகள் எரிந்து கொண்டிருந்தபோது அதிலிருந்து துா்நாற்றம் வீசியது. இதுகுறித்து அப்பகுதி இளைஞா்கள் பென்னாகரம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா்.

தகவலின் பேரில் பென்னாகரம் காவல் துணை கண்காணிப்பாளா் மகாலட்சுமி, காவல் ஆய்வாளா் குமரவேல் பாண்டியன் உள்பட போலீஸாா் நிகழ்விடம் எரிந்த நிலையில் இருந்த சடலத்தை மீட்டு பென்னாகரம், அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட கண்காணிப்பாளா் மகேஸ்வரன் நிகழ்விடம் வந்து விசாரணை நடத்தினாா். இதுகுறித்து பென்னாகரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இச்சம்பவத்தில் குற்றவாளிகளைப் பிடிக்க நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

முதற்கட்ட விசாரணையில் இறந்தவருக்கு 25 வயது மதிக்கத்தக்க இளைஞா் என்பது தெரியவந்துள்ளது. உடற்கூறாய்வுக்குப் பிறகே கொலைக்கான காரணம் குறித்து தெரியவரும் என போலீஸாா் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com