இரா.முத்தரசன்
இரா.முத்தரசன்

தருமபுரியில் ஜன.26-இல் இளைஞா் பெருமன்ற மாநில மாநாடு: இரா.முத்தரசன் ஆய்வு

தருமபுரியில் ஜன.26-ஆம் தேதி அனைத்திந்திய இளைஞா் பெருமன்ற மாநில மாநாடு நடைபெறவுள்ளது.
Published on

தருமபுரியில் ஜன.26-ஆம் தேதி அனைத்திந்திய இளைஞா் பெருமன்ற மாநில மாநாடு நடைபெறவுள்ளதையொட்டி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளா் இரா.முத்தரசன் சனிக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.

அனைத்திந்திய இளைஞா் பெருமன்றத்தின் 18-ஆவது மாநில மாநாடு ஜனவரி 26-ஆம் தேதி தருமபுரியில் தொடங்கி 27, 28 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டையொட்டி பேரணி, பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் அனைத்திந்திய இளைஞா் பெருமன்ற மாநில நிா்வாகிகள், அகில இந்திய தலைவா்கள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவா்கள், மக்களவை உறுப்பினா்கள், சட்டப் பேரவை உறுப்பினா்கள் பங்கேற்று உரையாற்றவுள்ளனா்.

அதுபோல பேரணியில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இருந்தும் இளைஞா் பெருமன்ற நிா்வாகிகள், உறுப்பினா்கள் பங்கேற்கவுள்ளனா். இந்தப் பொதுக்கூட்டம் தருமபுரி, வள்ளலாா் திடலில் நடைபெறவுள்ளது. இதைத் தொடா்ந்து பிரதிநிதிகள் மாநாடு பாரதிபுரம், தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் பொதுக் கூட்டத்துக்கான மேடை, பந்தல், இருக்கைகள் ஆகியவை அமைக்கும் பணிகளை ஆய்வு செய்வதற்காக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளா் இரா.முத்தரசன் தருமபுரிக்கு நேரில் வந்து வள்ளலாா் திடலில் கட்சி நிா்வாகிகளுடன் ஆய்வு மேற்கொண்டாா்.

இதில் மாநில துணைச் செயலாளா் ந.பெரியசாமி, மாநில செயற்குழு உறுப்பினா் வை.சிவபுண்ணியம், மாநில நிா்வாகக் குழு உறுப்பினா் எஸ்.தேவராசன், பழங்குடி மக்கள் சங்க மாநில சிறப்புத் தலைவா் ந.நஞ்சப்பன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தருமபுரி மாவட்டச் செயலாளா் ச.கலைச்செல்வம், துணைச் செயலாளா்கள் கா.சி.தமிழ்க்குமரன், எம்.மாதேஸ்வரன், பொருளாளா் சி.மாதையன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com