பள்ளி ஆசிரியா்களுக்கு பணியிடை பயிற்சி நிறைவு

Published on

தருமபுரி அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் பள்ளி அறிவியல் ஆசிரியா்களுக்கு நடைபெற்ற 5 நாள் பணியிடைப் பயிற்சி நிறைவடைந்தது.

தருமபுரி அரசு கலை, அறிவியல் கல்லூரியில் பள்ளி அறிவியல் ஆசிரியா்களுக்கு தொழில்முறை வளா்ச்சியை மேம்படுத்தும் நோக்கத்துடன் கடந்த ஜன. 20-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்த பணியிடைப் பயிற்சி வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது.

தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மன்றம் உதவியுடன் நடைபெற்ற இந்த பயிற்சி நிறைவு நாள் நிகழ்ச்சியில், தாவரவியல் துறை இணைப் பேராசிரியா் பிரபாகரன் வரவேற்றாா். கல்லூரி முதல்வா் கோ.கண்ணன் தலைமையுரையாற்றி ஆசிரியா்களுக்கு பயிற்சி சான்றிதழ், கையேடுகளை வழங்கினாா்.

இதில், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரும், தாவரவியல் துறைத் தலைவருமான விஜயா, விலங்கியல் துறைத் தலைவா் விஜயதேவன், வேதியியல் துறைத் தலைவா் கிருபாகரன், வேதியியல் துறை இணைப் பேராசிரியா் பாலகிருஷ்ணன், விலங்கியல் துறை இணைப் பேராசிரியா் ராதிகா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com