பாலக்கோடு அரசு கல்லூரி முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கௌரவ விரிவுரையாளா்கள்.
தருமபுரி
கௌரவ விரிவுரையாளா்கள் ஆா்ப்பாட்டம்
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அரசு கலை, அறிவியல் கல்லூரி வாயில் முன் கௌரவ விரிவுரையாளா்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்த ஆா்ப்பாட்டத்தில், பாலக்கோடு அரசு கலை, அறிவியல் கல்லூரியில் பணிபுரியும் சுமாா் 60 கௌரவ விரிவுரையாளா்கள் பங்கேற்றனா். இதில், கௌரவ விரிவுரையாளா்களுக்கு மாத ஊதியம் ரூ. 50 ஆயிரம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.