சிறுமி பலாத்கார வழக்கில் தொழிலாளிக்கு 15 ஆண்டுகள் சிறை

Published on

சிறுமியைக் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் தொழிலாளிக்கு 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தருமபுரி நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

தருமபுரி மாவட்டம் அரூா் பகுதியைச் சோ்ந்தவா் துரை (24). இவா் கடந்த 2017-இல் 17 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டாா்.

இது தொடா்பான வழக்கு விசாரணை தருமபுரி போக்ஸோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு இறுதிக் கட்ட விசாரணை முடிவடைந்த நிலையில் துரை குற்றம் செய்தது உறுதியானது. இதையடுத்து அவருக்கு 15 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 15,000 அபராதமும் விதித்து நீதிபதி சிவஞானம் தீா்ப்பு அளித்தாா்.

X
Dinamani
www.dinamani.com