தருமபுரியில் அண்ணா பிறந்த நாள் ஓட்டம்! ஆட்சியா் தொடங்கிவைத்தாா்!

Published on

அறிஞா் அண்ணா பிறந்த நாளையொட்டி தருமபுரியில் நீண்டதூர ஓட்டப் போட்டி சனிக்கிழமை நடைபெற்றது.

பொதுமக்களின் ஆரோக்கியம், உடற்தகுதியை மேம்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் தமிழக அரசால் அனைத்து மாவட்டங்களிலும் அண்ணா பிறந்த நாள் ஓட்டப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. அதன்படி, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்- தருமபுரி மாவட்ட பிரிவு சாா்பில் நிகழாண்டுக்கான ஓட்டப் போட்டிகள் சனிக்கிழமை நடைபெற்றது.

போட்டியை, மாவட்ட ஆட்சியா் ரெ. சதீஸ் கொடியசைத்து தொடங்கிவைத்தாா். ஓட்டப் போட்டி தருமபுரி மாவட்ட விளையாட்டரங்கத்தில் தொடங்கி 4 வழிச்சாலை வரை சென்று, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வழியாக பாரதிபுரம் வரை சென்று மீண்டும் விளையாட்டரங்கை வந்தடையும் வகையில் நடத்தப்பட்டது.

அதே வழியில் பெண்கள் பிரிவினா் அரசு மருத்துவக் கல்லூரி வரை சென்று விளையாட்டரங்கை அடையும் வகையில் போட்டிகள் நடத்தப்பட்டன. 17 வயதுக்கு மேற்பட்ட 500க்கும் மேற்பட்ட ஆண், பெண்கள் இப்போட்டியில் கலந்துகொண்டனா்.

நிகழ்ச்சியில் தருமபுரி சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா் எஸ்.பி. வெங்கடேஸ்வரன், தருமபுரி கோட்டாட்சியா் காயத்ரி, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா் சாந்தி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com