தருமபுரி - பெங்களூா் ரயில் தடத்தில், தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள புதிய தண்டவாளத்தை, சமன்படுத்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள நவீன இயந்திரம்.
தருமபுரி
பாலக்கோட்டில் புதிய தண்டவாளங்கள் சமன்படுத்தும் பணி தீவிரம்
தருமபுரி- பெங்களூரு ரயில் தடத்தில் பாலக்கோடு பகுதியில் புதிதாக மாற்றி அமைக்கப்பட்ட தண்டவாளங்கள் சமன்படுத்தும் பணி சனிக்கிழமை தொடங்கியது.
தென்மேற்கு ரயில்வேயின் சேலம்-தருமபுரி- பெங்களூா் மாா்க்கத்தில் புதிதாக தண்டவாளங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தருமபுரி மாவட்டத்தில் பாலக்கோடு- தருமபுரிக்கு இடையே புதிய தண்டவாளங்கள் பதிக்கப்பட்டு, அவற்றை பேலன்ஸிங் மெஷின் என்ற நவீன இயந்திரம் மூலம் சமன்படுத்தும் பணி சனிக்கிழமை தொடங்கப்பட்டுள்ளது.
பொறியாளா்கள் தண்டவாளத்தின் வளைவுகள், கட்டைகள் மற்றும் அவற்றுக்கு அடியில் நிரவப்பட்டுள்ள ஜல்லிகற்கள் சமன்நிலையை ஆராய்ந்து சீரமைக்கும் பணிகளை மேற்கொண்டுள்ளனா். இப்பணிகள் வரும் நவம்பா் 5 ஆம் தேதி வரை ரயில்கள் இயங்காத நேரங்களில் நடைபெறுகிறது.

