தருமபுரி
கார்- லாரி மோதல் 6 பேர் காயம்
மேட்டூர், டிச. 26: மேச்சேரி அருகே கார் மீது லாரி மோதியதில் 6 பேர் காயமடைந்தனர். சேலம் கொண்டலாம்பட்டியைச் சேர்ந்தவர் பத்ரிநாராயணன். ஞாயிற்றுக்கிழமை காலை தனது உறவினர்கள் 6 பேருடன் காரில் பெங்களூர் சென்
மேட்டூர், டிச. 26: மேச்சேரி அருகே கார் மீது லாரி மோதியதில் 6 பேர் காயமடைந்தனர்.
சேலம் கொண்டலாம்பட்டியைச் சேர்ந்தவர் பத்ரிநாராயணன். ஞாயிற்றுக்கிழமை காலை தனது உறவினர்கள் 6 பேருடன் காரில் பெங்களூர் சென்றார். தொப்பூர் அருகே வந்த போது லாரி ஒன்று மோதியது. இதில் கார் பலத்த சேதம் அடைந்தது. இதில் பயணம் செய்த பத்திரி நாராயணன், நாகராஜ் (40), சிசிகலா (36), வசந்தா (35) உள்பட 6 பேர் காயமடைந்தனர்.
இவர்கள் சேலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து மேச்சேரி போலீஸôர் விசாரிக்கின்றனர்.