மேட்டூர், டிச. 26: சுனாமியால் உயிரிழந்தவர்களுக்கு மேட்டூர் புதுச்சாம்பள்ளியில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
சுனாமி பாதித்த 6-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி புதுச்சாம்பள்ளி பகுதி மக்கள் மெழுகு தீபம் ஏந்தி அஞ்சலி செலுத்தினர். பொது இடத்தில் வைக்கப்பட்ட மெழுகு தீபத்தை அவ்வழியாக செல்வோர் ஏற்றி வைத்து ஒரு நிமிடம் அஞ்சலி செலுத்திச் சென்றனர்.
வீரக்கல் பேரூராட்சி தலைவர் தமிழ்வாணன், காங்கிரஸ் கட்சி பிரமுகர் கே. கோவிந்தராஜ், எஸ்.என். ராஜன், ஆசிரியர் பச்சியப்பன் உள்பட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.