எடப்பாடி, டிச. 26: பொங்கல் பண்டிகைக்கான இலவச வேட்டி, சேலைகள் எடப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சனிக்கிழமை வந்துதது. அவை ஜனவரி 1 முதல் விநியோகிக்கப்படுகிறது.
சேலம் மாவட்டத்தில் சுமார் 18 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு வேட்டி, சேலை வழங்கப்படுகிறது. எடப்பாடி வட்டத்தில் மட்டும் சுமார் 66 ஆயிரம் குடும்ப அட்டைகள் உள்ளன. இதில் தகுதியானவர்களுக்கு 62 ஆயிரத்து 137 வேட்டி, சேலைகள் வழங்கப்படுகிறது. எடப்பாடி, கொங்கணாபுரம், பூலாம்பட்டி ஆகிய பிர்க்காக்களில் உள்ள 25 கிராமங்களுக்கு அந்ததந்த கிராம நிர்வாக அலுவலர்கள் மூலம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்காக முதல் கட்டமாக 45 ஆயிரம் சேலைகளும், 45 ஆயிரம் வேஷ்டிகளும் எடப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்தது. இவை ஜனவரி 1 முதல் வழங்க வருவாய்த்துறை ஆயத்தமாகி வருகிறது.