மேட்டூர், ஜன. 1: புத்தாண்டு தினத்தில் மேட்டூர் அணை பூங்காவில் சுற்றுலா பயணிகள் திரண்டனர்.
÷சனிக்கிழமை புத்தாண்டு தினம் என்பதால் சேலம், தருமபுரி, ஈரோடு மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் மேட்டூருக்கு வந்திருந்தனர். முனியப்பன் கோவிலில் ஆடு கோழிகள் பலியிட்டு பொங்கலிட்டனர். மேட்டூர் அணை மீன்களை வாங்கி சமைத்து உண்டனர். அணை பூங்காவுக்கு சனிக்கிழமை 6,899 பார்வையாளர்கள் வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.