பரமத்தி வேலூர், ஜூலை 3: பரமத்தி வேலூரை அடுத்த பாண்டமங்கலம் ஆர்.என். ஆக்ஸ்போர்டு மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற இரு நாள் அறிவியல் கண்காட்சி சனிக்கிழமை நிறைவடைந்தது.
திருநெல்வேலியில் இருந்து வந்த இரண்டு பேருந்துகளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நடமாடும் கண்காட்சியில், காற்றழுத்த ராக்கெட், மறுசுழற்சி முறையில் காகிதம் தயாரிக்கும் கருவி போன்றவை காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. அந்தரத்தில் ஆடும் பந்து, மிதக்கும் மெழுகுவர்த்தி போன்ற எளிய அறிவியல் பரிசோதனைகள் செய்து காட்டப்பட்டன.
கண்காட்சியை பள்ளி மாணவ,மாணவிகள், பெற்றோர் மற்றும் பொதுமக்கள் திரளானோர் கண்டு களித்தனர்.
நிகழ்ச்சியில், பள்ளியின் தலைவர் நல்லுசாமி, செயலாளர் சண்முகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.