குமாரபாளையம், ஜூலை 3: குமாரபாளையத்தை அடுத்த வேதாந்தபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இலவச கண் சிகிச்சை முகாமில் (படம்) 222 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 68 பேர் கண் நோய் அறுவை சிகிச்சைக்குத் தேர்வு செய்யப்பட்டனர்.
குமாரபாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா அறக்கட்டளை, ஸ்ரீ சித்தி விநாயகர் கோயில் மண்டப அறக்கட்டளை, நாமக்கல் மாவட்ட பார்வையிழப்பு தடுப்புச் சங்கம் மற்றும் அரசன் மருத்துவமனை ஆகியவை இணைந்து நடத்திய இம்முகாமுக்கு, மண்டப அறக்கட்டளைத் தலைவர் ஆர்.டி.வி. நாகராஜன் தலைமை வகித்தார். செயலர் எஸ். எல்லப்பன் வரவேற்றார். தொழிலதிபர் கே.பி. சண்முகம் முகாமைத் தொடக்கி வைத்தார்.
முகாமில், அரசன் கண் மருத்துவமனைக் குழுவினர் 222 பேருக்கு பரிசோதனை மேற்கொண்டனர். இதில், 68 பேர் இலவச கண் அறுவை சிகிச்சைக்குத் தேர்வு செய்யப்பட்டனர். நிர்வாகிகள் எல்.ஆர்.எல். சுந்தரராஜன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.