எடப்பாடி, ஜூலை 3: தமிழக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் கே.பழனிச்சாமி, எடப்பாடி தொகுதி வாக்காளர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை நன்றி தெரிவித்தார்.
கொங்கணாபுரம் ஒன்றியத்தைச் சேர்ந்த சமுத்திரம், கஸ்பா, அரிசிபாளையம், புதுப்பாளையம், முத்தியம்பட்டி, மாணிக்கம்பட்டி, சித்தரபாளையம் உள்ளிட்ட 66 கிராம வாக்காளர்களுக்கு அமைச்சர் நன்றி தெரிவித்தார். அப்போது அவர் பேசியது:
இந்தாண்டு 25 லட்சம் குடும்பங்களுக்கு கிரைண்டர், மிக்ஸி, ஃபேன், பள்ளி மாணவர்களுக்கு லேப்-டாப் வழங்கப்படும். இந்தியாவில் பதவியேற்ற ஒன்றரை மாதங்களில் தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா தான் என்றார்.
இதில், அதிமுக மாவட்ட துணைச் செயலாளர் மாதேஸ், ஜெ., பேரவை மாவட்டச் செயலாளர் காங்கேயன், ஒன்றியச் செயலாளர் கரட்டூர் மணி, பொதுக்குழு உறுப்பினர் ராஜா, மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் தனபால் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
அரிசிபாளையம் கிராமத்தில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து பேசுகிறார் அமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி.