ராசிபுரம், ஜூலை 3:பாவை பாலிடெக்னிக் கல்லூரியில் இந்தக் கல்வியாண்டுக்கான வகுப்புகள் தொடக்க விழா கல்வி நிறுவனத்தின் தலைவர் ஆடிட்டர் என்.வி.நடராஜன் தலைமையில் அண்மையில் நடந்தது.
தாளாளர் மங்கை நடராஜன், முதல்வர் செüந்திரராஜன், கல்வி நிறுவன துணைத் தலைவர் டி.ஆர். மணிசேகரன், செயலாளர் டி.ஆர். பழனிவேல், கல்லூரி டீன் சுப்ரமணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில், மாணவ, மாணவியர் பெற்றோர்களுக்கு பாத பூஜை செய்து வாழ்த்து பெற்றனர் (படம்).
விழாவில் பேசிய அறக்கட்டளைத் தலைவர் என்.வி. நடராஜன், ஆசிரியர்களும், பெற்றோரும் குழந்தைகளுக்கு சிறந்த எடுத்துக்காட்டாகவும், ஊக்குவிப்பாளர்களாகவும் விளங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.