திருச்செங்கோடு, ஜூலை 3: திருச்செங்கோடு அருகே மோட்டார் சைக்கிளும், டெம்போவும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் ஒருவர் உயிரிழந்தார்.
திருச்செங்கோடு அருகேயுள்ள குச்சிபாளையத்தைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (39). திருச்செங்கோட்டில் ரிக் உதிரிபாகங்கள் விற்கும் கடை நடத்தி வந்தார்.
சனிக்கிழமை இரவு பணியை முடித்து விட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த டெம்போ மோட்டார் சைக்கிளில் மோதியதாம். இதில் தூக்கி எறியப்பட்ட அவர், திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படும் வழியில் உயிரிழந்தார்.
இதுகுறித்து திருச்செங்கோடு புறநகர் போலீஸôர் வழக்குப்பதிவு செயது விசாரணை நடத்தி வருகின்றனர்.