நாமக்கல், ஜூலை 9: கல்லூரியில் படிக்கும்போது பண்பையும், ஒழுக்கத்தையும் கடைப்பிடித்தால் வேலைவாய்ப்பு தேடி வரும் என்று நாமக்கல் பிஜிபி பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் விவேகானந்தன் கூறினார்.
அண்மையில் நடைபெற்ற, கல்லூரியின் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்க விழாவில் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்தார். தொழில்நுட்பக் கல்வி பயிலும் மாணவர்களுக்கு வெளிநாடுகளில் எளிதில் வேலைவாய்ப்பு கிடைப்பதாகவும் அவர் கூறினார். விழாவுக்கு பிஜிபி கல்வி நிறுவனங்களின் தாளாளர் எம். கணபதி தலைமை வகித்தார். பொறியியல் துறைத்தலைவர் மகேஸ்வரன் உள்ளிட்ட பலர் விழாவில் கலந்து கொண்டனர்.