தம்மம்பட்டி, ஜூலை 9: தமிழகத்தில் குருமன்ஸ் சாதியை பழங்குடியினர் பிரிவில் சேர்க்கக் கோரி அதன் மாநில நிர்வாகிகள் தமிழக முதல்வருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர்.
குருமன்ஸ் நலச்சங்க மாநில நிர்வாகிகள் ராமராஜ், ராஜீ, மார்கண்டேயன், சுப்ரமணியன் ஆகியோர் முதல்வருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு:
குருமன்ஸ் சாதியை கலாசாரத்தின் அடிப்படையிலும், 2001-2002-ல் ஊட்டி பழங்குடியினர் ஆய்வுமைய அறிக்கை மற்றும் உச்ச நீதிமன்றத்தில் மாதுரி பட்டேல் வழக்கு தீர்ப்பு அடிப்படையிலும் ஆந்திர அரசு குருமன்ஸ் பிரிவை எஸ்டி., பிரிவாக அறிவித்துள்ளது.
அதேபோல் தமிழகத்திலும் குருமன்ஸ் சாதியை எஸ்டி., பிரிவில் சேர்க்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.