சேலம், ஜூலை 9: விழுப்புரம் மாவட்டம், போத்துவாய் தடாகம் பகுதியைச் சேர்ந்தவர் பாலு மகன் காமராஜ் (26). சேலம் சித்தர் கோயில் பகுதியில் தங்கி, ஹோமியோபதி மருத்துவம் இறுதியாண்டு படித்து வருகிறார்.
சனிக்கிழமை காலை காமராஜின் சொந்த ஊரில் இருந்து வந்த ஹக்கீம்கான் (27) என்பவருடன் பைக்கில் சேலத்துக்கு வந்தார்களாம். சேலம் குகையில் உள்ள அவர்களின் நண்பரைப் பார்த்து விட்டு மீண்டும் சித்தர் கோயில் பகுதிக்கு திரும்பியுள்ளனர். சிவதாபுரம் பைபாஸ் அருகே சென்றபோது பைக் நிலைதடுமாறி இருவரும் கீழே விழுந்தனராம். இதில் படுகாயமடைந்த இருவரும், சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு, காமராஜ் இறந்தார். இதுகுறித்து சேலம் போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸôர் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.