43 தேக்கு கட்டைகள் கடத்தல்: இளைஞருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம்

சேலம், ஜூலை 9: ஆத்தூர், நரசிங்கபுரம் பகுதியில் வனக்கோட்ட அலுவலர் நாகநாதன், வனச்சரகர் சுப்ரமணியன் உள்பட வனத்துறையினர் சனிக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.  அப்போது, அவ்வழியே இருசக்கர வாகனத்தில் 43
Published on
Updated on
1 min read

சேலம், ஜூலை 9: ஆத்தூர், நரசிங்கபுரம் பகுதியில் வனக்கோட்ட அலுவலர் நாகநாதன், வனச்சரகர் சுப்ரமணியன் உள்பட வனத்துறையினர் சனிக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.

 அப்போது, அவ்வழியே இருசக்கர வாகனத்தில் 43 தேக்குமரக் கட்டைகளை ஏற்றி வந்த நபரைப் பிடித்து விசாரித்தனர். இதில், அவர் ஆத்தூர் பகுதியைச் சேர்ந்த தங்கமுத்து (35) என்பதும், வனப்பகுதியில் இருந்து தேக்கு கட்டைகளை வெட்டி வந்ததும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, அவரிடமிருந்த தேக்குக் கட்டைகளை பறிமுதல் செய்த வனத்துறையினர், தங்கமுத்துக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.