ஏற்காடு, ஜூலை 14: ஏற்காடு ஏரியின் படகு இல்லத்தில், புதிதாக இரு கேஸ் மோட்டார் படகுகளை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அண்மையில், பொதுப்பணித்துறையால் ரூ.1 கோடி மதிப்பில் ஏற்காடு ஏரி தூர்வாரப்பட்டது. இதனால், புதுப்பொலிவுடன் காணப்படும் ஏரியில், சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்கும் வகையில் படகுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, சுற்றுச்சூழல் மாசுபாட்டை அதிகளவில் ஏற்படுத்தாத கேஸ் மோட்டார்கள் மூலம், இரண்டு படகுகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இப்படகில் 8 பேர் பயணம் செய்ய முடியும். ஏற்கெனவே, 61 பெடல் படகுகளும், 10 ரோ படகுகளும் உள்ளதாக தமிழ்நாடு ஒட்டல் படகுத்துறை மேலாளர் அசோகன் தெரிவித்தார்.