பெங்களூர், எலக்ட்ரானிக் சிட்டி பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு சிலர் கொள்ளையடிக்க முயற்சிப்பதாக, போலீஸôருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அப்பகுதிக்குச் சென்ற போலீஸôர், அங்கு பதுங்கியிருந்த பெங்களூர், தொட்டபேகூரைச் சேர்ந்த பிரான்சிஸ் (45), சோமகுமார் (35). பெட்டதலசூர் பகுதியைச் சேர்ந்த கலீல் (27). ஹொங்கசந்திராவைச் சேர்ந்த சுனில்குமார் (30) ஆகியோரைக் கைது செய்தனர். அவர்களிடமிருந்து அரிவாள், உருட்டுக்கட்டை போன்ற ஆயுதங்கள், 5 செல்போன்கள் மற்றும் காரைப் பறிமுதல் செய்தனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கைது செய்யப்பட்ட 4 பேரும் பிரபல ரெüடி ஜே.சி. நாராயணனின் கூட்டாளிகள் என்று கூறப்படுகிறது. இவர்கள் மீது ஏற்கெனவே எலக்ட்ரானிக்சிட்டி, சர்ஜாபுரா, மடிவாளா ஆகிய காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளனவாம்.