குமாரபாளையம், ஜூலை 23: குமாரபாளையம் டெக்ஸ்சிட்டி அரிமா சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சங்கத் தலைவர் ஏ.ரத்தினம் தலைமை வகித்தார். நிர்வாகச் செயலர் ஆர்.வடிவேல் முருகன், செயலர் எம்.வி.முருகேசன், உறுப்பினர் பெருக்கத் தலைவர் என்.ஜெகதீஸ் முன்னிலை வகித்தனர். பொருளாளர் பி.தனசேகரன் வரவேற்றார். நிர்வாகிகளுக்கு சங்கத்தின் கூட்டு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆர்.தனபாலன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
புதிய நிர்வாகிகள் : தலைவர் - ஏ.தனபால், நிர்வாகச் செயலர் ஆர்.பி.ரவிராம கிருஷ்ணகுமார், பொருளாளர் - எஸ்.பன்னீர் செல்வம், உதவித் தலைவர்களாக டி.பி.கோகுல்நாத், ஜெ.டி.தென்னரசு, ஆர்.வடிவேல்முருகன், இணைச் செயலராக ஏ.கதிர்வேல் உள்ளிட்ட நிர்வாகிகள் பொறுப்பேற்றனர்.