ராசிபுரம்,ஜூலை 23: ஈரோடு தாமரை மேல்நிலைப்பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி., படித்து வருபவர் மாணவி ராகவி. இவர் தற்போது ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.மாணவிக்கு சிகிச்சை அளிக்க அவரது பெற்றோர்களிடம் போதிய வசதி இல்லாதாதல் பல தனியார் நிறுவனத்திடம் உதவி கோரினர். இதை அறிந்த ராசிபுரம் ஞானமணி கல்வி நிறுவனம் அம்மாணவியின் சிகிசைக்காக ரூ.20 ஆயிரம் நிதிஉதவி அளித்தது.