திருச்செங்கோடு,ஜூலை 23: அதிமுக அரசு 2001-2006-ல் நடைமுறைப்படுத்திய மிகவும் நல்ல திட்டமான மழை நீர் சேமிப்பு திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும் என்றார் தமிழக வருவாய்த்துறை அமைச்சர் தங்கமணி.
திருச்செங்கோடு கொங்கு வேளாளர் திருமண மண்டபத்தில் சனிக்கிழமை நடந்த விதைகள் நடும் விழாவில் பங்கேற்ற அவர் பேசியது:
தமிழகத்தில் உள்ள மற்ற மாவட்டங்களுக்கு அனைத்து துறைகளிலும் எடுத்துக்காட்டாக விளங்குவது நாமக்கல் மாவட்டம். கடுமையான உழைப்பின் காரணமாகவே இந்த உயர்வு கிடைத்துள்ளது.
இந்தியாவில் எதிர்காலத்தில் தண்ணீர் பற்றாக்குறை பெரும் பிரச்சினையாக உருவெடுக்கும் என்று விஞ்ஞானிகள் கூறியதை அடுத்து கடந்த 2001-2006ல் மழை நீர் சேகரிப்பு திட்டத்தை முதல்வர் கொண்டு வந்து சிறப்பாக அமல் படுத்தினார். ஆனால் அடுத்து வந்த திமுக அரசு அதனை நீர்த்துப்போகச்செய்து செயலற்ற திட்டமாக மாற்றி விட்டது. மழை நீர் சேமிப்பு திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும். என்றார் அவர். ÷
இதனைத்தொடர்ந்து 26 ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு அவர் விதைகளை வழங்கினார் . ஒரு ஊராட்சிக்கு 1.90 லட்சம் விதைகள் வீதம் வழங்கப்பட்டது.
விழாவிற்கு ஒüவை கல்வி நிலைய தாளாளர் வழக்கறிஞர் ராஜேஸ்வரன் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் திருநாவுக்கரசு வரவேற்றார்.
விழாவில் திருச்செங்கோடு எம்எல்ஏ சம்பத்குமார், மாவட்ட ஆட்சியர் குமரகுருபரன், மாவட்ட காவல்த்துறை கண்காணிப்பாளர் பிரவேஷ் குமார், மாவட்ட வன அலுவலர் ஸ்ரீ வஸ்தவா, திட்ட ஒருங்கிணைப்பாளர் மோகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினர். உடற்கல்வி ஆசிரியர் கெüரிசங்கர் நன்றி கூறினார்.