முத்தாயம்மாள் பொறியியல் கல்லூரியில் பொறியாளர்கள் கூட்டமைப்பு துவக்கம்

ராசிபுரம்,ஜூலை 23: முத்தாயம்மாள் பொறியியல் கல்லூரியில் மின்னணு மற்றும் கருவியியல் துறையின் 2011 - 2012-ம் கல்வி ஆண்டிற்கான பொறியாளர்கள் கூட்டமைப்பின் துவக்க விழா கல்லூரி வளாகத்தில் அண்மையில் நடைப்பெற்
Published on
Updated on
1 min read

ராசிபுரம்,ஜூலை 23: முத்தாயம்மாள் பொறியியல் கல்லூரியில் மின்னணு மற்றும் கருவியியல் துறையின் 2011 - 2012-ம் கல்வி ஆண்டிற்கான பொறியாளர்கள் கூட்டமைப்பின் துவக்க விழா கல்லூரி வளாகத்தில் அண்மையில் நடைப்பெற்றது. கல்லூரி முதல்வர் எம்.மாதேஸ்வரன் தலைமை வகித்தார். துறை தலைவர் முருகானந்தம் வரவேற்றார்.  மாணவ செயலாளர் பிரியங்கா வரும் கல்வி ஆண்டிற்கான திட்ட நடவடிக்கையினை வெளியிட்டார்.

விழாவின் சிறப்பு விருந்தினராக முனைவர் சிவானந்தராஜா பங்கேற்று, கருவியியல் துறையின் முக்கியத்துவம் குறித்தும், வேலை வாய்ப்புகள் பற்றியும் விளக்கி கூறினார். மேலும் இவ்விழாவில் தொழில்நுட்ப இதழை  கல்லூரி தாளாளர்  ஆர்.கந்தசாமி செயலாளர்  கே.குணசேகரன் அவர்கள் முன்னிலையில் சிறப்பு விருந்தினர் வெளியிட்டார். இதில் ஒருங்கிணைப்பாளர்  வெங்கடேஷ், விரிவுரையாளர் ராதிகா, மாணவ செயலாளர் யுவராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.