ரூ.4.78 லட்சம் உதவி உபகரணங்கள்

நாமக்கல், ஜூலை 23: நாமக்கல்லில் மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.4.78 லட்சம் மதிப்பிலான உதவி உபகரணங்களை நாமக்கல் எம்எல்ஏ கே.பி.பி. பாஸ்கர்  வழங்கினார். நாமக்கல் மாவட்டத்தில் தேசிய அளவிலான அட்டைகளை வழங்க கோர
Published on
Updated on
1 min read

நாமக்கல், ஜூலை 23: நாமக்கல்லில் மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.4.78 லட்சம் மதிப்பிலான உதவி உபகரணங்களை நாமக்கல் எம்எல்ஏ கே.பி.பி. பாஸ்கர்  வழங்கினார்.

நாமக்கல் மாவட்டத்தில் தேசிய அளவிலான அட்டைகளை வழங்க கோரி மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பிக்கும் முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. நாமக்கல் தெற்கு அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த இம் முகாமிற்கு நாமக்கல் எம்எல்ஏ பாஸ்கர் தலைமை வகித்தார்.

இவ் விழாவில் நூற்றுக்கணக்கான மாற்றுத் திறனாளிகள் பங்கேற்று, தேசிய அளவிலான அட்டை கேட்டு விண்ணப்பித்தனர். அவர்களுக்கு மருத்துவக் குழுவினர் உடனடியாக பரிசோதனை மேற்கொண்டு, மருத்துவச் சான்றிதழ் வழங்கினர்.

இந்தச் சான்றிதழ்களை கொண்டு அவர்களுக்கு தேசிய அளவிலான அட்டைகள் வழங்கப்பட்டன.

இதற்கிடையே கடந்த ஆண்டு நவம்பரில் நடந்த சிறப்பு முகாமில் பங்கேற்று, தங்களுக்கு அரசு நலத் திட்ட உதவி கோரி விண்ணப்பித்தவர்களுக்கு சனிக்கிழமை நடந்த விழாவில் மாற்றுத் திறனாளிகளுக்கான உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டன.

மொத்தம் 158 பயனாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிள்கள், ஊன்று கோல், செயற்கை கால், காதொலி கருவி உள்ளிட்ட ரூ.4.78 லட்சம் மதிப்பிலான 213 உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டதாக நாமக்கல் கோட்டாட்சியர் ராமசாமி தெரிவித்தார்.  நாமக்கல் எம்எல்ஏ பாஸ்கர், பயனாளிகளுக்கு உதவி உபகரணங்களை வழங்கி உரையாற்றினார்.

இதுகுறித்து ஆட்சியர் ஜெ.குமரகுருபரன் கூறுகையில், இம் முகாமில் மாற்றுத் திறனாளிகளால் வழங்கப்பட்ட விண்ணப்பங்கள் உரிய முறையில் பரிசீலனை செய்யப்பட்டு, அவர்களுக்கு நலத் திட்ட உதவிகளை செய்ய உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.