மகளிர் கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல்: கோயில் அர்ச்சகர் கைது

திருச்செங்கோடு, ஜூலை 30: திருச்செங்கோடு மகளிர் கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக அர்ச்சகர் கைதானார்.  திருச்செங்கோடு அருகே ஒரு மகளிர் கல்லூரி இயங்கி வருகிறது. கடந்த 7-ந் தேதி இந்தக் கல்லூரியி
Published on
Updated on
1 min read

திருச்செங்கோடு, ஜூலை 30: திருச்செங்கோடு மகளிர் கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக அர்ச்சகர் கைதானார்.

 திருச்செங்கோடு அருகே ஒரு மகளிர் கல்லூரி இயங்கி வருகிறது. கடந்த 7-ந் தேதி இந்தக் கல்லூரியின் அலுவலகத்திற்கு போன் வநதது. போனில் ஆபாசமாகப் பேசிய நபர் கல்லூரியில் வெடிகுண்டு வைத்துள்ளேன். சிறிது நேரத்தில் வெடிக்கும் என்று பேச்சை துண்டித்து விட்டார்.

 இது குறித்து கல்லூரி நிர்வாகத்தினர் திருச்செங்கோடு புறநகர் போலீசுக்கு தகவல் அளித்தனர்.

 அவர்கள் வெடிகுண்டு நிபுணர்கள், மெடல் டிடெக்டர்கள் மற்றும் மோப்பநாய் சகிதம் கல்லூரிக்கு வந்து சோதனையில் ஈடுபட்டனர். சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பதை அறிந்தனர்.

 மிரட்டல் விடுத்தவர் செல் எண்ணை வைத்து போலீசார் விசாரணையில் ஈடுபட்டனர்.

 தொலைத்தொடர்புத்துறை அதிகாரிகள் துணையுடன் விசாரணையில் இறங்கிய அவர்கள் மிரட்டல விடுத்தவர் திருவாரூர் மாவட்டம் சாட்டைகுடி வேதபுரீஸ்வரர் கோயிலில் அர்ச்சகராக இருக்கும் ராமநாதன் (28)(படம்) என்பதைக் கண்டு பிடித்தனர். செல்போன் சிக்னலை வைத்து நடத்திய ஆய்வில் அவர் சித்தளந்தூரில் இருப்பது தெரியவந்தது.

 போலீசார் அங்கு சென்று வெள்ளிக்கிழமை அவரைக் கைது செய்தனர். இவரை விசாரித்ததில் பல கல்லூரிகளுக்கும், நிறுவனங்களுக்கும் இமமாதிரி மிரட்டல் விடுத்துள்ளது தெரிய வந்தது.

 போலீசார் அவரைக் கைது செய்து 15 நாள் காவலில் வைத்துள்ளனர். அவரிடமிருந்த செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து அர்ச்சகர் கைதானது இங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.