Enable Javscript for better performance
23 எழுத்தாளர்களுக்கு ரூ.3.4 லட்சம் பரிசு- Dinamani

சுடச்சுட

    

    23 எழுத்தாளர்களுக்கு ரூ.3.4 லட்சம் பரிசு

    Published on : 19th September 2012 11:43 PM  |   அ+அ அ-   |    |  

    நாமக்கல், அக். 2: எழுத்தாளர் கு. சின்னப்பபாரதி அறக்கட்டளையின் 3-ம் ஆண்டு இலக்கியப் பரிசளிப்பு விழா நாமக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

    இதில், சார்பில் சிறந்த நூல்களைப் படைத்த எழுத்தாளர்கள் 23 பேருக்கு ரூ.3.4 லட்சம் மதிப்பிலான பரிசுகள் வழங்கப்பட்டன.

    நாமக்கல் செல்வம் கல்லூரியில் நடைபெற்ற இவ்விழாவுக்கு, கு.சி.பா. அறக்கட்டளையின் தலைவரும், செல்வம் கல்வி நிறுவனங்களின் தாளாளருமான பொ. செல்வராஜ் தலைமை வகித்தார்.

    இலங்கை கொழுந்து இதழாசிரியர் அந்தனி ஜீவா, சேலம் கட்டடப் பொறியாளர் எஸ்.பி.  ராமசாமி, பெங்களூர் மென்பொருள் பொறியாளர் எஸ்.கே. சம்பத், ஸ்ரீராம் சிட்ஸ் நிறுவன நாமக்கல் முதல்நிலை மேலாளர் எஸ். ராஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விருதுகளின் நோக்கம் குறித்து எழுத்தாளர் கு. சின்னப்பபாரதி உரையாற்றினார். சிறப்பு விருந்தினராக தினமணி ஆசிரியர் கே. வைத்தியநாதன் பங்கேற்று, எழுத்தாளர்களுக்குப் பரிசு வழங்கிப் பேசினார்.

    விழாவில், பனிநிலவு நூலை எழுதிய லண்டனில் வாழும் இலங்கை எழுத்தாளர் ரா. உதயணனுக்கு முதல் பரிசாக ரூ.50 ஆயிரம் வழங்கப்பட்டது. மேலும் வெளிநாடுவாழ் எழுத்தாளர்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த நூல்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் பரிசுத் தொகையாக அளிக்கப்பட்டது.

    பரிசு பெற்ற எழுத்தாளர்கள் மற்றும் நூல்களின் விவரம்:

    வி.ஜீவகுமாரன் (டென்மார்க்)

    - சங்கானைச் சண்டியன்

    நாகரத்தினம் கிருஷ்ணா (பிரான்ஸ்)

     - மாத்தகரி

    சை.பீர்முகமது (மலேசியா)

     - பெண் குதிரை

    நடேசன் (ஆஸ்திரேலியா)

    - வண்ணத்திகுளம்

    தெணியான் (இலங்கை)

    - ஒடுக்கப்பட்டவர்கள்

    கே.விஜயன் - (இலங்கை)

    - மனநதியின் சிறு அலைகள்

    சிவசுப்ரமணியன் (இலங்கை) - சொந்தங்கள்

    தனபாலசிங்கம் (இலங்கை)

    - ஊருக்கு நல்லது சொல்வேன்

    கலைச்செல்வன் (இலங்கை) - மனித தர்மம்

    உபாலிலீலாரத்னா (இலங்கை)

    - கு.சி.பா.வின் சுரங்கம், தாகம், நாவல்களின் சிங்கள மொழியாக்கம்

    பரிசு பெற்ற தமிழக எழுத்தாளர்கள், நூல்களின் விவரம்:

    ஆர்.எஸ்.ஜேக்கப் - பனையண்ணன்,

    சுப்ரபாரதி மணியன்

    -சுப்ரபாரதி மணியன் கதைகள்

    மு.இளங்கோவன் - இணையம் கற்போம்

    புவலர். ராசகண்ணையன் - குறளோசை

    ப.ஜீவகாருண்யன் - கவிச்சக்ரவர்த்தி

    குறிஞ்சிவேலன் - முழுமையைத் தேடும் முழுமையற்ற புள்ளிகள்

    லேனா தமிழ்வாணன்

    - ஒரு பக்கக் கட்டுரை 500

    வெண்ணிலா - நீரில் அலையும் முகம்

    பூங்குருநல் அசோகன்

    - குமரமங்கலம் தியாக தீபங்கள்

    கூத்தங்குடி அழகு ராமானுஜன்

    - காவிரி மண்ணின்

    நேற்றைய மனிதர்கள்

    வாழ்நாள் சாதனை, கொடைச்சிறப்பு விருதுகள்:

    தமிழ் மொழிபெயர்ப்புக்கான வாழ்நாள் சாதனையாளர் விருது மயிலை பாலுவுக்கும், தமிழ் - ஹிந்தி மொழியாக்கத்துக்கான வாழ்நாள் சாதனையாளர் விருது தில்லியைச் சேர்ந்த எச். பாலசுப்ரமணியத்துக்கும் அளிக்கப்பட்டது.

    அதேபோல், எழுத்தாளர்களுக்கு நிதியுதவி புரிந்து, அவர்களை ஊக்குவதற்காக இலங்கையை சேர்ந்த புரவலர் ஹாசிம் உமருக்கு இலக்கியக் கொடைச்சிறப்பு விருது வழங்கப்பட்டது.

    விழாவில், எச்.பாலசுப்ரமணியம் ஹிந்தியில் மொழியாக்கம் செய்த பனி நிலவு, உபாலி லீலாரத்னா சிங்களத்தில் மொழியாக்கம் செய்த தாகம், இந்திய இலக்கியத்திற்கு கு.சின்னப்பபாரதியின் பங்களிப்பு ஆகிய நூல்கள் வெளியிடப்பட்டன.

    அறக்கட்டளைச் செயலர் கா. பழனிசாமி, துணைத்தலைவர் சி.க. கருப்பண்ணன், உறுப்பினர் சி. ரங்கசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    kattana sevai
    flipboard facebook twitter whatsapp