கிருஷ்ணகிரி, பிப். 10: கிருஷ்ணகிரியில் அனுமதியின்றி மதுபானம் விற்றதாக 20 பேரை போலீஸôர் கைது செய்தனர்.
மாவட்டத்தில் உணவகங்கள், பெட்டிக்கடைகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் முறையான அனுமதியின்றி மதுபானம் விற்பதாக போலீஸôருக்கு தகவல் கிடைத்து. இதையடுத்து, மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதியில் மது விலக்கு போலீஸôர் வியாழக்கிழமை சோதனை மேற்கொண்டனர். இதில், அனுமதியின்றி மது விற்ற 20 பேரை கைது செய்தனர். கடந்த 1-ம் தேதி முதல் இதுவரை மாவட்டத்தில் அனுமதியின்றி மது விற்றதாக 67 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சூதாட்டம்: 6 பேர் கைது
கிருஷ்ணகிரியில் பணம் வைத்து சூதாடியதாக 6 பேரை போலீஸôர் கைது செய்தனர்.
÷கிருஷ்ணகிரி தாலுகா காவல்நிலைய உதவி ஆய்வாளர் ராமமூர்த்தி தலைமையில் போலீஸôர் வியாழக்கிழமை கூசுமலை அடிவாரத்தில் ரோந்துப் பணியை மேற்கொண்டனர். அப்போது பணம் வைத்து சூதாடிய செüந்தரராஜன், ராஜன் மற்றும் குருபரப்பள்ளி ஆற்று பாலம் அடியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேர் உள்பட 6 பேரை போலீஸôர் கைது செய்தனர்.