தருமபுரி, பிப். 10: சமுதாயக் கூடம் கட்டுவதற்கு புதுப்பட்டி கிராம மக்கள் ரூ.3.67 லட்சம் வழங்கினர்.
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியத்துக்குள்பட்ட புதுப்பட்டி கிராமத்தில் ரூ.11 லட்சம் மதிப்பில் சமுதாயக் கூடம் கட்ட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசின் தன்னிறைவு திட்டத்தில் செயல்படுத்தப்படும் இந்த பணிக்காக பொதுமக்கள் பங்களிப்பாக ரூ.3.67 லட்சம் வழங்கப்பட்டது. இதற்கான காசோலையை ஊராட்சித் தலைவர் தங்கம்மாள், மாவட்ட நிர்வாகத்திடம் புதன்கிழமை வழங்கினார். மாவட்ட ஊரக வளர்ச்சித் தலைவரும், ஆட்சியருமான ஆர்.லில்லி பெற்றுக் கொண்டார். வட்டார வளர்ச்சி அலுவலர் சி.அங்குசாமி உடனிருந்தார்.