சூதாடியதாக 6 பேர் கைது
பரமத்தி வேலூர்,பிப்.10: பரமத்தி வேலூர் அருகே உள்ள நன்செய் இடையாற்றில் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த 6 பேர்களை பரமத்தி வேலூர் போலீசார் கைது செய்தனர்.
நன்செய் இடையாற்றில் உள்ள காவிரியாற்றின் கரையில் சிலர் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டிருப்பதாக பரமத்தி வேலூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் போலீடஸôர் சம்பவ இடத்திற்கு சென்று சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த நரசிம்மன் (28),பூபதி ராஜா (27),பிரபாகரன்(24),
சசி(28),முருகேசன்(43),சரவணன் ஆகிய 6 பேர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மினி லாரி மோதி தொழிலாளி சாவு
திருச்செங்கோட்டை அடுத்த அப்பூர்பாளையம் காலனியைச் சேர்ந்தவர் ராம்குமார்(28) வெல்டராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி திலகவதி(25). இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். வியாழக்கிழமை இரவு ராம்குமாரும்,திலவதியும் திருச்செங்கோடு சென்றுவிட்டு பைக்கில் அப்பூர்பாளையம் திரும்பிக் கொண்டிருந்தனர். கைலாசம்பாளையம் அருகே வரும்போது சேலத்திலிருந்து வந்த தனியார் நிறுவன மினி லாரி பைக் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ராம்குமார் அதே இடத்தில் உயிரிழந்தார். காயமடைந்த திலகவதி திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
சம்பவம் குறித்து திருச்செங்கோடு போலீஸôர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.