சேலம், பிப். 10: தமிழகத்தில் பூரண மதுவிலக்கை வலியுறுத்தி உலகளாவிய காந்திய இயக்கம் சார்பில் சேலத்தில் சனிக்கிழமை 100-வது நாள் போராட்டம் நடைபெறுகிறது.
இது குறித்து உலகளாவிய காந்திய இயக்கம், தமிழக லட்சிய குடும்பம் அமைப்புகளின் சார்பில் டாக்டர் சி.ப்ராங்ளின் ஆசாத் காந்தி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
இளைஞர்கள் மது அருந்தி தங்களது வாழ்க்கையை முழுமையாக சீரழிக்காமல் இருக்கும் விதமாக, மதுவின் தீமைகளைப் பற்றி எழுதிய அட்டையை கழுத்தில் மாட்டிக் கொண்டு சேலம் ஓரியண்டல் சக்தி தியேட்டர் அருகில் உள்ள காந்தி சிலையின் கீழ் நின்று தினமும் ஒரு மணி நேரம் அமைதியான முறையில் போராட்டம் நடத்தி வருகிறோம்.
சனிக்கிழமை (பிப்ரவரி 11) இப்போராட்டத்தின் 100-வது நாள். காந்தி போதித்த அஹிம்சையையும், சத்தியத்தையும் நிலைநாட்ட அனைவரும் ஒன்றிணைந்து மதுவுக்கு எதிராகப் போராட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.