குமாரபாளையம், பிப். 10: குமாரபாளையம் அருகே கார் மோதியதில் மொபட்டில் சென்ற கட்டடத் தொழிலாளி உயிரிழந்தார்.
குமாரபாளையத்தை அடுத்த வட்டமலை ஜோதி நகரைச் சேர்ந்தவர் பொன்னுசாமி (55). இவரும், உறவினரான எல்லாம்மாள் (35) என்பவரும் கட்டட வேலைக்குச் சென்று விட்டு வெள்ளிக்கிழமை மாலை மொபட்டில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். தேசிய நெடுஞ்சாலையில் நேரு நகர் அருகே சென்றபோது சேலம் நோக்கிச் சென்ற கார் மொபட் மீது மோதியது.
இதில், பலத்த காயமடைந்த பொன்னுச்சாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயத்துடன் எல்லம்மாள் குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து குமாரபாளையம் போலீஸôர் விசாரிக்கின்றனர்.