Enable Javscript for better performance
அனுமதியின்றி ஆர்ப்பாட்டம்: தேமுதிகவினர் கைது- Dinamani

சுடச்சுட

    

    தமிழக எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த் மீது பொய் வழக்குப் போடுவதாக தமிழக அரசைக் கண்டித்து, தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் புதன்கிழமை அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தேமுதிகவினர் கைது செய்யப்பட்டனர்.

    தருமபுரி வட்டாட்சியர் அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாவட்டச் செயலர் மருத்துவர் வி. இளங்கோவன் தலைமை வகித்தார்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட அவைத் தலைவர் தம்பி (எ) ஜெய்சங்கர், நகரச் செயலர் வெங்கட்ராஜ், ஒன்றியச் செயலர் ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தருமபுரியில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக 44 பேர் கைது செய்யப்பட்டனர்.

    இதேபோல, அரூர் வட்டாட்சியர் அலுவலகம் அருகே ஒன்றியச் செயலர் ஏ.எஸ். செல்வம் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 40 பேர் கைது செய்யப்பட்டனர்.

    பாலக்கோட்டில் ஒன்றியச் செயலர் விஜயசங்கர் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 105 பேர் கைது செய்யப்பட்டனர். பென்னாகரத்தில் மாவட்டப் பொருளாளர் காவேரி வர்மா தலைமையில் 37 பேர் கைது செய்யப்பட்டனர்.

    தருமபுரி மாவட்டம் முழுவதும் 9 பெண்கள் உள்பட 226 பேர் கைது செய்யப்பட்டனர்.

    கிருஷ்ணகிரியில்...

    கிருஷ்ணகிரி ரவுண்டானா அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு தேமுதிக மாவட்டப் பொருளாளர் ராமலிங்கம் தலைமை வகித்தார். மாநில மாணவரணி இணைச் செயலர் சங்கர்ராவ், மாவட்ட இளைஞரணி செயலர் அன்பரசு, சின்னராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நகரச் செயலர் சங்கர், நிர்வாகிகள் கனபள்ளிநாயுடு, மணிகண்டன், முத்து, சங்கர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    ஒசூரில்...

    ஒசூர் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலர் சந்திரன் தலைமை வகித்தார். தொகுதி பொறுப்பாளர்கள் ஜான் திமோதி (ஒசூர்), முருகேசன் (சூளகிரி), நகரச் செயலர் வேல்முருகன், நகரப் பொருளாளர் மணி, ஒன்றியச் செயலர் ராமசாமிரெட்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    தேன்கனிக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டத் துணைச் செயலர் கணேஷ்குமார் தலைமை வகித்தார்.

    கெலமங்கலம் ஒன்றியச் செயலர் அன்பு உள்ளிட்ட 40 பேர் கலந்து கொண்டனர். இவர்களை தேன்கனிக்கோட்டை போலீஸார் கைது செய்து மாலையில் விடுவித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai