Enable Javscript for better performance
61 மாணவ, மாணவிகளுக்கு ரூ.3 லட்சம் உதவித் தொகை அளிப்பு- Dinamani

சுடச்சுட

    

    தருமபுரி தொன்போஸ்கோ கல்லூரி மாணவ, மாணவிகள் 61 பேருக்கு ஐவிடிபி தொண்டு நிறுவனத்தின் சார்பில், ரூ.3 லட்சம் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது.

    ஆண்டுதோறும் இந்தக் கல்லூரியில் சேரும் ஏழை மாணவர்களை கண்டறிந்து, அவர்களது இருப்பிடத்துக்கு நேரில் சென்று கல்லூரி நிர்வாகத்தினர் விசாரித்து கல்வி உதவித் தொகை பெற பரிந்துரை செய்கின்றனர். இதன்படி, நிகழாண்டு ஐவிடிபி தொண்டு நிறுவனத்திடம் கல்லூரி நிர்வாகம் பரிந்துரை செய்ததில் 61 மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

    கல்லூரியின் அனைத்துப் பிரிவுகளிலும் பயிலும் இந்த மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை வழங்கும் விழா கல்லூரி அரங்கில் புதன்கிழமை நடைபெற்றது. முதல்வர் ஆ. சிலுவை முத்து தலைமை வகித்தார். துணை முதல்வர் டேனியல் அம்புரோஸ் வரவேற்றார். கல்லூரிச் செயலர் அருள்தந்தை பெலார்மின் பெர்னாண்டோ வாழ்த்திப் பேசினார்.

    மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகைகளை வழங்கி ஐவிடிபி நிறுவனர் குழந்தை பிரான்சிஸ் பேசியது:

    பொருளாதார வசதியில்லை என்பதற்காகக் கிராமப்புற மாணவர்கள் யாரும் உயர்கல்வி கற்க முடியாத நிலை ஏற்படக் கூடாது. அரசு அளிக்கும் உதவிகளைப் பெற்று கிராமப்புற மாணவர்கள் உயர்கல்வி கற்க வேண்டும் என்றார் அவர்.

    பேராசிரியர்கள் கி. சுடர்மணி, பாண்டி மற்றும் மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai