Enable Javscript for better performance
இளைஞர் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    கூடங்குளம் அணு மின் நிலையத்தைத் திறக்க வலியுறுத்தி, இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் தருமபுரியில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    தருமபுரி நகர பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்து தருமபுரி மக்களவைத் தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆர். ராஜவீரப்பன் பேசியது:

    தமிழகத்தில் நிலவி வரும் கடும் மின் வெட்டை நிவர்த்தி செய்ய மின் உற்பத்தித் திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டிய தமிழக அரசு மெத்தனமாகச் செயல்பட்டு வருகிறது. முந்தைய அரசு மீது குற்றம் சுமத்துவதையும், மத்திய அரசைக் குறை கூறுவதையுமே வாடிக்கையாகக் கொண்டுள்ளது. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

    மூன்று மாதங்களில் மின்சார பிரச்னைக்கு தீர்வு ஏற்படுத்தப்படும் என்று அதிமுக தேர்தல் வாக்குறுதி அளித்தது.

    ஆட்சிக்கு வந்து ஓராண்டுக்கு மேலாகியும் பிரச்னைக்கு தீர்வு காணப்படவில்லை. பெரும்பாலான மாவட்டங்களில் 14 மணி நேரம் மின் தடை அமல்படுத்தப்படுகிறது.

    தமிழகத்தில் நிலவும் அறிவிக்கப்படாத மின் வெட்டைத் திரும்பப் பெற வேண்டும். கூடங்குளம் அணு மின் நிலையத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்றார் அவர்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பாடி நாகராஜன், மோகன் மற்றும் இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலர்கள் ரவிக்குமார், காமராஜ், கார்த்திக், செல்வகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai