Enable Javscript for better performance
உலக சிக்கன நாள் போட்டி பரிசளிப்பு- Dinamani

சுடச்சுட

    

    தருமபுரியில் உலக சிக்கன நாள் போட்டி பரிசளிப்பு விழா அண்மையில் நடைபெற்றது.

    தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விழாவுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் ப. ராமர் தலைமை வகித்தார்.

    விழாவையொட்டி முன்பே பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. மேலும், சேமிப்புத் திட்டத்தை ஊக்குவித்த முகவர்கள், அரசு அலுவலர்களும் தேர்வு செய்யப்பட்டனர்.

    இதில், மாவட்ட அளவில் முகவர்களுக்கான முதல் பரிசு நா. கீதாலட்சுமி பெற்றார். நிலை முகவர்களில் முதல் பரிசை டி. ஆயிச் செட்டி பெற்றார். மாவட்ட அளவிலான சம்பளப் பட்டியல் சேமிப்புக் குழுவில் முதல் பரிசு தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக பொது மேலாளர் ஆல்பர்ட் தினகரனுக்கு வழங்கப்பட்டது.

    பேச்சுப் போட்டியில் மாணவர் கே. ரமேஷ், கட்டுரைப் போட்டியில் மாணவர் ப. வெங்கடேசன் ஆகியோர் முதல் பரிசு பெற்றனர். நாடகப் போட்டியில் பாப்பிரெட்டிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் முதலிடம் பிடித்தனர். நடனப் போட்டியில் நல்லம்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகள் முதலிடம் பிடித்தனர்.

    முதல் பரிசைத் தவிர ஒவ்வொரு பிரிவிலும் 3 பரிசுகள் வழங்கப்பட்டன. பரிசுகளை மாவட்ட வருவாய் அலுவலர் ப. ராமர் வழங்கி பாராட்டு தெரிவித்தார். ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சிறுசேமிப்பு) எம். பெரியசாமி, மாவட்டக் கல்வி அலுவலர் ந. ராஜசேகரன், அஞ்சல் துறை கோட்ட கண்காணிப்பாளர் எம். ஸ்ரீரங்கன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai