Enable Javscript for better performance
295 பெண்களுக்கு திருமண நிதி, தங்கம் அளிப்பு- Dinamani

சுடச்சுட

    

    தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த ஏழைப் பெண்கள் 295 பேருக்கு ரூ.1.19 கோடி மதிப்பிலான திருமண நிதியும், 1,180 கிராம் தங்கமும் வழங்கப்பட்டன.
     தமிழக அரசின் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தின் கீழ், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சனிக்கிழமை ஏழைப் பெண்களுக்கு நிதியுதவி வழங்கும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் ஆர். லில்லி தலைமை வகித்தார்.
     295 பெண்களுக்கு ரூ.1.19 கோடி நிதியும், 1,180 கிராம் தங்கமும் வழங்கி உயர் கல்வித் துறை அமைச்சர் பி. பழனியப்பன் பேசியது:
     10-ஆம் வகுப்பு வரை படித்த ஏழைப் பெண்களுக்கு திருமண உதவித் தொகையாக ரூ.25 ஆயிரமும், 4 கிராம் தங்கமும் வழங்கப்படுகிறது. பட்டம் மற்றும் பட்டயப் படிப்பு முடித்த பெண்களுக்கு ரூ.50 ஆயிரமும், 4 கிராம் தங்கமும் வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தில் மாவட்டத்தில் இதுவரை 4,380 பெண்களுக்கு ரூ.13.56 கோடி நிதியும், தலா 4 கிராம் தங்கமும் வழங்கப்பட்டுள்ளது. இதேபோல், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நிதியுதவி வழங்கப்படுகிறது என்றார் அவர்.
     மருத்துவ முகாம்: முன்னதாக, பி. மல்லாபுரத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறை சார்பில் வட்டார அளவிலான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் 1100-க்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனையும், சிகிச்சையும் அளிக்கப்பட்டது.
     30 பேர் தீவிர சிகிச்சைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சிகளிலும் அமைச்சர் பி. பழனியப்பன் கலந்து கொண்டு பேசினார்.
     மாவட்ட வருவாய் அலுவவலர் ப. ராமர், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் வி. விஜயலட்சுமி, மாவட்ட சமூக நல அலுவலர் பா. கோட்டீஸ்வரி, எம்எல்ஏ கே.பி. அன்பழகன் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai