Enable Javscript for better performance
மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் பணியிட மாற்றம்- Dinamani

சுடச்சுட

    

    ஆசிரியர்களுக்கான கலந்தாய்வில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்ததைத் தொடர்ந்து, தருமபுரி மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் சென்னைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

    இதுகுறித்து முதன்மைக் கல்வி அலுவலர் செ.அமுதவல்லி கூறியது:

    தருமபுரி மாவட்டத்தில் பணியாற்றும் தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் கடந்த சில மாதங்களுக்கு முன் நடைபெற்றது. இதில், முறைகேடு நடைபெற்றுள்ளதாக மாவட்ட ஆட்சியருக்கு புகார்கள் வந்தன. விசாரணை நடத்தியதில் முறைகேடுகள் நடைபெற்றது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் மகாலிங்கம் மீது நடவடிகை எடுக்க மாவட்ட ஆட்சியர் ஆர்.லில்லி பரிந்துரை செய்தார். இதையடுத்து, மகாலிங்கத்தை சென்னை மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளராக பணியிடம் மாற்றம் செய்து மாநில கல்வி இயக்ககம் உத்தரவிட்டது என தெரிவித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai