Enable Javscript for better performance
11 பேருக்கு உதவித் தொகை ஆணை அளிப்பு- Dinamani

சுடச்சுட

    

    தருமபுரி மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர் கூட்டத்தில் 11 பேருக்கு மாதாந்திர உதவித் தொகைக்கான ஆணைகளை மாவட்ட ஆட்சியர் ஆர்.லில்லி வழங்கினார்.

    உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட 10 நபர்களுக்கும், விதவை உதவித் தொகை என மொத்தம் 11 பேருக்கு மாதாந்திர உதவித்தொகை தலா ரூ. ஆயிரத்துக்கான ஆணைகளை அவர் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் தனித் துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) என்.செல்வராஜன், துணை ஆட்சியர் (பயிற்சி) சிவபிரியா, மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்) சி.மாணிக்கவாசகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai