Enable Javscript for better performance
வன்முறைச் சம்பவங்களுக்கு கட்சிகள் கண்டனம்- Dinamani

சுடச்சுட

    

    தருமபுரி அருகே நிகழ்ந்த வன்முறைச் சம்பவங்களுக்கு அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
     இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தருமபுரி மாவட்டச் செயலரும், எம்எல்ஏ-வுமான ந. நஞ்சப்பன் வெளியிட்ட அறிக்கை:
     நாயக்கன்கொட்டாய் உள்ளிட்ட கிராமங்களில் நிகழ்ந்த விரும்பத்தகாத சம்பவங்கள் அனைத்து தரப்பையும் வேதனையடையச் செய்துள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும். சம்பவத்துக்கு காரணமானவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களும், அப் பகுதியில் வாழும் மக்களும் அமைதியாக இருந்து ஒற்றுமையாக வாழ வழிவகை செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
     மார்க்சிஸ்ட்- லெனினிஸ்ட் பிரிவு மாநிலக் குழு உறுப்பினர் சந்திரமோகன் அறிக்கை:
     தருமபுரி மாவட்டத்தில் நிகழ்ந்த வன்முறைச் சம்பவங்கள் கண்டிக்கத்தக்கது. சம்பவம் நடைபெற்ற பகுதிகளில் கம்யூனிஸ்ட் கருத்துகள் செல்வாக்கு பெற்றவை.
     இந்தச் சூழலிலும் இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டிருப்பதற்கான பின்னணி முழுமையாக விசாரிக்கப் படவேண்டும். தாக்குதலில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்ய வேண்டும். இரு பிரிவினரும் வேறு வன்முறைச் சம்பவங்களில் ஈடுபடாமல் அமைதி காக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai