Enable Javscript for better performance
அறிவியல் கண்காட்சி- Dinamani

சுடச்சுட

    

    தருமபுரி செந்தில் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.
     தருமபுரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் செ. அமுதவல்லி, இந்தக் கண்காட்சியை திறந்து வைத்துப் பார்வையிட்டார். பள்ளித் தாளாளர்கள் செந்தில் சி. கந்தசாமி, கே.மணிமேகலை, நிர்வாக அலுவலர் சி. சக்திவேல் ஆகியோர் உடனிருந்தனர்.
     இந்தக் கண்காட்சியில் தொடக்கக் கல்வி முதல் மேல்நிலைக் கல்வி பயிலும் மாணவ, மாணவிகள் பலரும் தங்களது மாதிரி படைப்புகளை இடம்பெறச் செய்திருந்தனர். குடும்ப அட்டையின் பொருள்கள் பெறும் முறைக்கு ஸ்மார்ட் கார்டு பயன்படுத்தும் விதம் குறித்து 4, 5- ஆம் வகுப்பு மாணவர்கள் மாதிரிகளை இடம்பெறச் செய்திருந்தனர்.
     இதேபோல், புவி வெப்பத்தைப் பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்தல், காது கேளாதவர்களுக்கு ஒலியை உணரச் செய்யும் கருவி, சூரிய சக்தி மூலம் மின்சாதனங்களை இயக்குதல் ஆகியவை பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தன.
     மொத்தம் 150 படைப்புகள் இந்தக் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன. ஏராளமான பள்ளி மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் கண்காட்சியைப் பார்வையிட்டனர்.
     இதற்கான ஏற்பாடுகளை, பள்ளி முதல்வர் ஆர். பழனிசாமி, துணை முதல்வர்கள் கிருஷ்ணவேணி, வெங்கடாசலம் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர். சிறந்த படைப்புகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும், இந்த படைப்புகள் மாவட்ட அளவிலான கண்காட்சியில் இடம்பெறச் செய்யப்படவுள்ளன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai