Enable Javscript for better performance
குரூப்-2 வினாத்தாள் வெளியான வழக்கு: சிபிசிஐடி காவலில் விசாரித்த 4 பேருக்கு நீதிமன்றம் ஜாமீன்- Dinamani

சுடச்சுட

    

    குரூப்-2 வினாத்தாள் வெளியான வழக்கு: சிபிசிஐடி காவலில் விசாரித்த 4 பேருக்கு நீதிமன்றம் ஜாமீன்

    By dn  |   Published on : 18th November 2012 11:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    குரூப்-2 வினாத்தாள் முன்கூட்டியே வெளியானது தொடர்பான வழக்கில் சிபிசிஐடி போலீஸôர் காவலில் எடுத்து விசாரித்த 4 பேருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

    தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில், கடந்த ஆகஸ்ட் 12-ஆம் தேதி மாநிலம் முழுவதும் குரூப்-2 தேர்வு நடைபெற்றது. ஆனால், தேர்வுக்கு முன்னதாகவே தருமபுரி, ஈரோடு மாவட்டங்களில் வினாத்தாள் வெளியானது. இது தொடர்பாக, தருமபுரி மாவட்டம், கம்பைநல்லூர் காவல் நிலையத்திலும், ஈரோடு காவல் நிலையத்திலும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 22 பேரைக் கைது செய்து போலீஸôர் விசாரணை நடத்தி வந்தனர்.

    பின்னர், செப்டம்பர் மாதம் முதல் இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸôர் விசாரிக்கத் தொடங்கினர். முதல்கட்டமாக கைதானவர்களில் ஒடிசாவைச் சேர்ந்த ஆனந்தராவ் (55), சென்னை ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த ஸ்ரீதர்ராஜா (24), திருவள்ளூரைச் சேர்ந்த தியாகராஜ் (35), செந்தில்குமார் (31) ஆகிய 4 பேரை காவலில் எடுத்து விசாரித்தனர்.

    இந்த நிலையில், 4 பேருமே தங்களுக்கு ஜாமீன் வழங்கக் கோரி தருமபுரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இந்த ஜாமீன் மனுக்கள் மீது விசாரணை நடத்திய

    நீதிபதி எஸ். வணங்காமுடி, ஆனந்தராவ் உள்ளிட்ட 4 பேருக்கும் ஜாமீன் வழங்கி சனிக்கிழமை உத்தரவிட்டார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai