Enable Javscript for better performance
தருமபுரி வன்முறைச் சம்பவ வழக்கு: சிபிசிஐடி விசாரணைக்கு வரவேற்பு- Dinamani

சுடச்சுட

    

    தருமபுரி வன்முறைச் சம்பவ வழக்கு: சிபிசிஐடி விசாரணைக்கு வரவேற்பு

    By dn  |   Published on : 18th November 2012 11:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தருமபுரி அருகே நாயக்கன்கொட்டாயில் நடைபெற்ற வன்முறைச் சம்பவம் குறித்த வழக்குகள் சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டதை இந்திய குடியரசுக் கட்சி (ஆர்.எஸ். கவாய் பிரிவு) வரவேற்றுள்ளது.

    இதுகுறித்து அந்தக் கட்சியின் மாநில துணைத் தலைவர் சா.சென்னமூர்த்தி சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

    நாயக்கன்கொட்டாய் வன்முறைச் சம்பவம் தொடர்பான வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டதை இந்திய குடியரசு கட்சி (ஆர்.எஸ். கவாய் பிரிவு) பாராட்டுகிறது.

    மேலும், வன்முறைச் சம்பவம் குறித்து ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி தலைமையில் விசாரணைக் குழு அமைக்க வேண்டும் என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai