Enable Javscript for better performance
நவம்பர் 29-இல் புதுதில்லியில் இந்தியக் குடியரசுக் கட்சி பேரணி- Dinamani

சுடச்சுட

    

    நவம்பர் 29-இல் புதுதில்லியில் இந்தியக் குடியரசுக் கட்சி பேரணி

    By dn  |   Published on : 18th November 2012 11:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாயக்கன்கொட்டாய் வன்முறைச் சம்பவத்தைக் கண்டித்து புதுதில்லியில் நவம்பர் 29-இல் நாடாளுமன்றம் முன்பாக இந்தியக் குடியரசுக் கட்சியின் பேரணி நடைபெறும் என்று அதன் தேசியத் தலைவர் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்தார்.

    தருமபுரி அருகே நாயக்கன்கொட்டாய் கிராமத்தில் கடந்த 7-ஆம் தேதி ஏற்பட்ட வன்முறைச் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட 3 கிராமங்களை சனிக்கிழமை நேரில் பார்வையிட்ட பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறியது:

    நத்தம் காலனி, கொண்டம்பட்டி, அண்ணாநகர் ஆகிய 3 கிராமங்களில் தலித் மக்களின் லட்சக்கணக்கான மதிப்புள்ள நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. மேலும், ரூ.10 கோடி மதிப்பிலான பொருள்கள் தீயில் கருகியுள்ளன. எனவே, மத்திய, மாநில அரசுகள் தலா ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.

    தமிழக முதல்வர் ஜெயலலிதா வழங்கியுள்ள ரூ.50 ஆயிரம் நிவாரணத் தொகை போதுமானதாக இல்லை. பாதிக்கப்பட்ட மக்களின் உண்மை நிலவரத்தை அறிந்து கூடுதல் தொகை வழங்க வேண்டும்.

    தலித் மக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். தொடர்ந்து இந்தப் பகுதிகளைச் சேர்ந்த கிராம மக்கள், மாணவர்கள், தொழில் புரிவோருக்கு உரிய பாதுகாப்புகளை வழங்க காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இந்தச் சம்பவத்தைக் கண்டித்து வரும் 29-ஆம் தேதி நாடாளுமன்றம் முன்பாக இந்தியக் குடியரசுக் கட்சியின் சார்பில் பேரணி நடைபெறும். பாதிக்கப்பட்ட கிராமங்களிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையிலும், சேதங்களை பட்டியலிட்டும் பிரதமர், மத்திய உள்துறை அமைச்சர், உள்துறைச் செயலர் ஆகியோரிடம் விரிவான அறிக்கை தாக்கல் செய்யப்படும்.

    வீடு இழந்தோருக்கு புதிய வீடுகள் கட்டித் தர வேண்டும். கலப்புத் திருமணம் செய்யும் தம்பதியருக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும் என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai