Enable Javscript for better performance
துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு- Dinamani

சுடச்சுட

    

    வன்முறையால் பாதிக்கப்பட்ட கிராமங்களில் ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    தருமபுரியை அடுத்த நாயக்கன்கொட்டாய் வன்முறைச் சம்பவத்தை தொடர்ந்து செங்கல்மேடு, அண்ணாநகர், கொண்டம்பட்டி ஆகிய கிராமங்களுக்குச் செல்லும் நுழைவு வாயில், குடியிருப்புப் பகுதிகளில் ஆங்காங்கே சிறப்புக் காவல் படை போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இவர்களில், ஏடிஎஸ்பி, டிஎஸ்பி, ஆய்வாளர்கள் நிலையில் உள்ள போலீஸார் மட்டுமே துப்பாக்கி வைத்திருந்தனர். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் 4 கிராமங்களிலும் துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மொத்தம் 7 இடங்களில் துப்பாக்கியுடன் 150-க்கும் மேற்பட்ட போலீஸார் 24 மணி நேரமும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai