Enable Javscript for better performance
\\\"முதல்வர் நேரில் வர வேண்டும்\\\'- Dinamani

சுடச்சுட

    

    வன்முறையால் பாதிக்கப்பட்ட நாயக்கன்கொட்டாய் ஊராட்சிக்குள்பட்ட கிராமங்களைப் பார்வையிட தமிழக முதல்வர் ஜெயலலிதா நேரில் வர வேண்டும் என தேசிய மக்கள் கட்சி வலியுறுத்தியுள்ளது.

    தருமபுரி அருகேயுள்ள நத்தம்காலனி, அண்ணாநகர், கொண்டம்பட்டி ஆகிய கிராமங்களை தேசிய மக்கள் கட்சியின் நிறுவனர் இனமுரசு கோபால், மாநிலத் தலைவர் மாறன் பெருமாள் ஆகியோரடங்கிய குழுவினர் திங்கள்கிழமை பார்வையிட்டனர்.

    பின்னர், செய்தியாளர்களிடம் அவர்கள் கூறியது:

    கீழவெண்மணி தொடங்கி, நத்தம்காலனி வரையிலும் தொடர்ந்து தலித் மக்கள் மீதான தாக்குதல் நீடித்து வருவதை இனியும் அனுமதிக்க முடியாது. குறிப்பாக, நத்தம் காலனியில் நடைபெற்ற தாக்குதல் என்பது பொருளாதார ரீதியாக வளம் பெற்றுள்ளவர்களை முழுமையாக அழித்துவிட வேண்டும் என்ற நோக்கில் நடத்தப்பட்டுள்ளது.

    தமிழக அரசு அளித்துள்ள ரூ.50 ஆயிரம் நிவாரணத் தொகை என்பது பாதிக்கப்பட்ட மக்களின் மனப்புண் ஆறுவதற்கு மட்டுமே உகந்தது. மனதாலும், பொருளாதார ரீதியாகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள இந்த மக்களை ஆற்றுப்படுத்த வேண்டுமெனில் தமிழக முதல்வர் ஜெயலலிதா நேரில் வந்து ஆறுதல் தெரிவிக்க வேண்டும்.

    மேலும், நத்தம் காலனியிலேயே தனி நீதிமன்றம் அமைத்து வழக்கு விசாரணையை சில மாதங்களுக்குள் முடித்து குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை பெற்றுத் தர வேண்டும்.

    பாதிக்கப்பட்ட மக்களுக்கு வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் உரிய நிவாரணம் பெற்று வழங்க வேண்டும் என்றனர் அவர்கள்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai