வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இன்று கடைசி நாள்
By dn | Published on : 20th November 2012 12:49 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க செவ்வாய்க்கிழமை (நவம்பர் 20-ம் தேதி) கடைசி நாள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் ஆர்.லில்லி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தருமபுரி மாவட்டத்தில் உள்ள பாலக்கோடு, பென்னாகரம், தருமபுரி, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் (தனி) ஆகிய 5 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியல் 2012 மற்றும் துணை வாக்காளர் பட்டியல்-1 ஆகியவை கடந்த அக்டோபர் 1-ம் தேதி வெளியிடப்பட்டது. இதுவரை வாக்காளர் பட்டியலில் இடம் பெறாதவர்கள், பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய, தொகுதி விட்டு தொகுதி மாற்றம் செய்வது உள்ளிட்டவற்றை அந்தந்த வரையறுக்கப்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் செவ்வாய்க்கிழமை காலை 10 முதல் 5 மணி வரை மேற்கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.