Enable Javscript for better performance
சிபி-சிஐடி எஸ்பி நேரில் விசாரணை- Dinamani

சுடச்சுட

    

    நாயக்கன்கொட்டாய் வன்முறைச் சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட கிராமங்களில் சிபி-சிஐடி காவல் கண்காணிப்பாளர் பி. பெருமாள் செவ்வாய்க்கிழமை நேரில் விசாரணை நடத்தினார்.

    தருமபுரி மாவட்டம், நாயக்கன்கொட்டாய் கிராமத்தில் கடந்த 7-ஆம் தேதி ஏற்பட்ட வன்முறைச் சம்பவத்தில் நத்தம் காலனி, கொண்டம்பட்டி, அண்ணாநகர் ஆகிய 3 கிராமங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இதில், 268 வீடுகளும், 54 வாகனங்களும் சேதமடைந்தன.

    இந்த வழக்கு விசாரணையை சிபி-சிஐடி போலீஸாருக்கு மாற்றம் செய்து கடந்த 16-ஆம் தேதி தமிழக அரசு உத்தரவிட்டது. இதையடுத்து, வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களும் சிபி-சிஐடி வசம் தருமபுரி மாவட்ட காவல் துறை ஒப்படைத்தது.

    இதைத் தொடர்ந்து, சிபி-சிஐடி எஸ்பி பி. பெருமாள் செவ்வாய்க்கிழமை பாதிக்கப்பட கிராமங்களை நேரில் பார்வையிட்டார். 3 கிராமங்களிலும் ஒவ்வொரு வீடாகச் சென்று சேதங்களைப் பார்வையிட்டு, அங்கிருந்தவர்களிடம் சம்பவம் குறித்து கேட்டறிந்தார். தீயில் கருகிய வாகனங்கள், சைக்கிள், மின்னணு சாதனங்களையும் பார்வையிட்டார்.

    பின்னர், பாதிக்கப்பட்ட மக்களிடம் அவர் பேசியது: ஒவ்வொரு வீட்டிலும் சேத மதிப்பு மற்றும் சம்பவம் நடைபெற்ற போது நேரில் பார்த்த காட்சிகள் அனைத்தையும் விசாரணை அதிகாரியும் முழுமையாகத் தெரிவிக்க வேண்டும். சிபி-சிஐடி விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.

    பின்னர், செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்:

     

    விசாரணைக்காக சிறப்புக் குழுக்கள் அமைக்கப்படுமா?:

    3 கிராமங்களில் சம்பவம் நடைபெற்றுள்ளது. இதன் தொடர்ச்சியாகவும் ஒரு சில இடங்களில் தீ வைப்புச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. எனவே, விசாரணைக்காக தனித்தனியே குழுக்கள் அமைக்கப்படும். இந்தக் குழுவினர் முழுமையாக விசாரணை நடத்திய பிறகு, அவற்றை ஒருங்கிணைத்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும்.

     

    தலைமறைவு குற்றவாளிகள் கைது செய்யப்படுவது எப்போது?:

    இந்த வழக்கில் தொடர்புடைய அனைத்து விவரங்களும் இப்போதுதான் சிபி-சிஐடி போலீஸாருக்கு கிடைத்துள்ளன. இவற்றை முழுமையாக ஆய்வு செய்து விசாரணையின் அடிப்படையில் குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்படுவர்.

     

    எரிந்து போன பொருள்கள் காட்சிப் பொருள்களாகவே உள்ளனவே?:

    விசாரணைக்காக இவற்றை முழுமையாக விடியோ பதிவு செய்தும், புகைப்படம் எடுத்தும் அனைத்துப் பொருள்களையும் கைப்பற்றி நீதிமன்றத்தில் ஒப்படைக்கவுள்ளோம். 5 நாள்களில் இந்தப் பணிகள் முடிவடையும். அதன்பிறகு, சேதமடைந்த வீடுகளை புனரமைக்கும் பணியை மாவட்ட நிர்வாகம் தொடங்கலாம் என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai